முன்பு ஒரு கதை இருந்தது ஆனால் இப்போது இல்லை : சமந்தா திருமணம் குறித்து தந்தை சோகம்
ஒரு கதை இருந்தது ஆனால் அது இனி இல்லை, எனவே புதிய கதையை தொடங்குவோம் என சம்ந்தாவின் தந்தை இணையத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமந்தா நாகசைதன்யா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான நடிகை சமந்தா - டோலிவுட்டின் முன்னணி ஹீரோ நாக சைதன்யா இருவரும் கடந்த ஆண்டு பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
ஒரு கதை இருந்தது
இருவரும் தங்களின் பிரிவை பற்றி பேசுவதை தவிர்த்து வந்த நிலையில் தற்போது சமந்தாவின் தந்தை சமூக வலைத்தளத்தில் தனது மனவருத்தத்தை வரிகளாக பதிவிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு தற்போது சமந்தா - நாக சைதன்யா திருமண புகைப்படங்களை பகிர்ந்து .
அதற்கு "நீண்ட காலத்திற்கு முன்னர் ஒரு கதை இருந்தது ஆனால் அது இனி இல்லை, எனவே புதிய கதையை தொடங்குவோம் மற்றும் ஒரு புதிய அத்தியாயம்".
மேலும் கமெண்ட் செக்ஷனில் "உங்கள் அனைவரின் உணர்வுகளுக்கு நன்றி. ஏன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த நான் நீண்ட நேரம் காத்திருந்தேன் ஆனால் துக்கப்பட்டு உட்காருவதற்கு இந்த வாழ்க்கை மிகவும் குறுகியது" என தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
பிசியாக இருக்கும் சமந்தா
வாழ்க்கையில் ஒரு சறுக்கல் ஏற்பட்டாலும் சமந்தா தனது திரை வாழ்க்கையில் மிகவும் பிஸியாகவே வலம் வருகிறார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிவரும் "யசோதா" படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக உள்ளார்.