நான் பண்ணிட்டேன் நீங்க பண்ணுங்க பார்க்கலாம் : ரசிகர்களுக்கு சேலஞ்ச் கொடுத்த சமந்தா

workoutvideo samntha challange
By Irumporai Jan 11, 2022 06:57 AM GMT
Report

சமீப காலமாகவே சோஷியல் மீடியாவில் வைரலாக இருந்து வருகிறார் நடிகை சமந்தா. கோலிவுட், டோலிவுட் பிஸியாக நடித்து வரும் நடிகை அண்மையில்தான் தனது காதல் கணவரை பிரிந்தார். அதன் பிறகு புத்துணர்வு பெற்றார் என்றே கூறலாம்.

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , பகிரும் பதுவுகள் எபோதும் வைரலாகும். இந்த நிலையில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் அவ்வப்போது ஷேர் செய்து வருகிறார் சமந்தா.

அதில், உடற்பயிற்சி உபகரணங்கள் ஏதுமின்றி உடற்பயிற்சி என்ற சேலஞ்சை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், என்னுடைய ஜிம் ட்ரெய்னர் என்னிடம் சேலஞ்ச் செய்தார். நான் உங்களுக்கு சேலஞ்ச் செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே சமந்தா மெலிந்துவிட்டதாக கிசுகிசுக்கும் அவரது ரசிகர்கள், இன்னுமா உடல் எடையை குறைக்க போகிறீர்கள் என குமுறுகின்றனர். சமீப காலமாக உடல் எடையை குறைப்பதில் ஆர்வம் காட்டுகிறார் சமந்தா , காரணம் அவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதுதான் என கூறப்படுகிறது.