விவாகரத்துக்கு பின் சகஜ நிலைக்கு திரும்பிய சமந்தா.. வெறித்தனமாக ஒர்க்கவுட் - வைரலாகும் புகைப்படம்
பல்வேறு உடற்பயிற்சிகள் மூலம் தன்னுடைய உடலை ஃபிட்னஸாக வைத்திருக்கும் சமந்தா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெறித்தனமாக உடல்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய உடல் எடையை செம்மையாக மெயின்டெயின் செய்து, தொடர்ந்து முன்னணி நாயகி என்கிற இடத்தை தக்க வைத்துள்ளவர் சமந்தா.
திருமணம் ஆகி தன்னுடைய காதல் கணவருடன், 4 வருடங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில்,திடீர் என கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
கணவரை விட்டு பிரிந்தாலும், தன்னை பற்றிய தொடர்ந்து எழுந்த வதந்திகளாலும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இவர், ஆன்மீக சுற்றுலா, மற்றும் தோழிகளுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
அந்த வகையில் தோழி வீட்டில் நடந்த தீபாவளி கொண்டாட்டம், நண்பர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சமந்தா கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியது.
அதே நேரம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் கூட அல்லு அர்ஜுன் நடித்து வரும் 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா அதிக சம்பளம் வாங்கிய தகவல் வெளியானது.
தன்னுடைய அன்றாட பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் சமந்தா.நீண்ட இடைவெளிக்கு பின்னர் தன்னுடைய ஜிம் ஒர்க்கவுட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.
இதில் ஓவர் டைட் உடையில் சமந்தா வெறித்தனமாக எஸ்சர்சைஸ் செய்வது தெரிகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.