நடிகை சமந்தாவின் திருமண நாள் இன்று - வெள்ளை நிற உடையில் வைரலாகும் புகைப்படம்
திருமண நாளில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற உடையில் சமந்தா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் பிஸியாக நடித்து வந்த சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் காதலித்து வந்தனர். இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக வலம் வந்தனர்.
அதன்பின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். பின்னர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் கோவாவில் மிக ஆடம்பரமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக, சமீபத்தில் சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
நாக சைதன்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில், இத்தகவலை வெளியிட்டிருந்தார். இதனிடையே, சமந்தாவுக்கு இன்று நான்காவது ஆண்டு திருமண நாள் ஆகும்.
எப்போதும் சமூகவலைதள பக்கங்களில் உற்சாகமான தகவல்களை வெளியிடும் சமந்தா, இம்முறை வெள்ளை நிற உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், பழைய காதல் பாடல்கள், பழைய பங்களாக்களின் நினைவுகள் தொடர்பாக பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதனிடையே சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமந்தா - நாகசைதன்யா தம்பதியை மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும், என நாகர்ஜூனாவுக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.