மோசமான நாட்கள்; அதை மறக்காதே - திடீரென வேதனையில் சமந்தா!
நடிகை சமந்தாவின் எமோஷனல் பதிவிற்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை சமந்தா
திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து, அரிய வகை தசை அழற்சி நோயான ‘மயோசிட்டிஸ்’ எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் வெளியே எங்கும் செல்லாமல், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது, சமந்தா கதாநாயகியாக நடிக்க “சகுந்தலம்” திரைப்படம் உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.
வேதனை
இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தின் சில புகைப்படங்களை பகிர்ந்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் "ஆழ்ந்த மூச்சு விடு பாப்பா. விரைவில் சரியாகிவிடும் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்த 7-8 மாதங்களில் நீ மிகவும் மோசமான நாட்களைப் பார்த்துவிட்டாய்,
அவற்றை எல்லாம் கடந்துவிட்டாய். அதை மறக்கவே கூடாது. நீ அவற்றை எவ்வாறு கடந்து வந்தாய் என்பதை நினைவில் வைத்துக் கொள். யோசிப்பதை நிறுத்தி, கவனத்தை சிதறடித்து, ஒரு அடியை மற்றொன்றுக்கு முன்னால் வைத்து நடந்தாய். வேலை முடிந்தது. நீ அதை எப்படி செய்தாய் என்பது நம்பமுடியாதது.
நீ அதை எப்படி தொடர்ந்து செய்தாய் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் உன்னைப் பற்றி நீ பெருமைப்பட வேண்டும். நீ வலிமையானவள்." என சமந்தா பதிவிட்டுள்ளார்.