நாக சைத்தான்யாவுடன் நான் மோசமான ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் சமந்தா பகீர் பேட்டி

141 Shares

சமந்தாவும், காதல் கணவரான நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டார்கள். தாங்கள் பிரிவது குறித்து அக்டோபர் 2ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர்.

இதையடுத்து தன் தோழியுடன் ரிஷிகேஷுக்கு சென்றிருக்கிறார் சமந்தா. இந்நிலையில் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு சமந்தா முன்பு அளித்த பேட்டி பற்றி தற்போது பேசப்படுகிறது.

அந்த பேட்டியில் சமந்தா கூறியிருந்ததாவது, நான் மோசமான ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். சாவித்ரிக்கு நடந்து போன்றே எனக்கும் நடந்திருக்கும்.

ஆனால் அதற்குள் நான் சுதாரித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டேன். எங்களின் உறவு நல்லமுறையில் முடிவுக்கு வராது என்று எனக்கு தெரியும்.

நாக சைதன்யா எனக்கு கணவராக கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கிறேன் என்றார். யாருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் என்பதை சமந்தா தெரிவிக்கவில்லை.

ஆனால் முன்னதாக நடிகர் சித்தார்த்தை சமந்தா காதலித்தார். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நேரத்தில் பிரிந்துவிட்டனர்.

அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இதற்கிடையே சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிந்தபோது ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள் என்று ட்வீட் போட்டார்.

அதை பார்த்தவர்கள் சமந்தாவை குத்திக் காட்டி தான் சித்தார்த் அப்படி ட்வீட் செய்தார் என்றார்கள். ஆனால் நான் யாரையும் குத்திக் காட்டி ட்வீட் போடவில்லை என்று சித்தார்த் விளக்கம் அளித்தார்.

You May Like This


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்