சமந்தாவை பிரிந்தது ஏன்? நாக சைதன்யா பரபரப்பு தகவல்

Naga Chaitanya Divorce Reason Samantha Ruth Prabhu
By Thahir Dec 20, 2021 12:10 AM GMT
Report

சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த ஆண்டு தாயாக விரும்பினார் சமந்தா. இந்நிலையில் 4வது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து சமந்தாவும், நாக சைதன்யாவும் சமூக வலைதளத்தில் அறிவித்தனர்.

சமந்தாவை பிரிந்தது ஏன்? நாக சைதன்யா பரபரப்பு தகவல் | Samantha Ruth Prabhu Naga Chaitanya Divorce Reason

தாங்கள் பிரிந்ததற்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பேட்டி ஒன்றில் நாக சைதன்யா கூறியதாவது, நான் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.

ஆனால் என் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க மாட்டேன் என்றார். அவர் சமந்தாவை மனதில் வைத்து தான் அப்படி பேசியிருக்கிறார்.

சமந்தா தேர்வு செய்யும் கதாபாத்திரங்கள் பிடிக்காமல் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் சமந்தா குத்தாட்டம் போட்டதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முன்னதாக அவர் சூப்பர் டீலக்ஸ், தி ஃபேமிலி மேன் 2 தொடரில் நடித்த கதாபாத்திரங்களும் விமர்சிக்கப்பட்டது.

சமந்தா தேர்வு செய்த கதாபாத்திரங்கள் நாக சைதன்யா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என்று முன்பே செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கதாபாத்திரம் குறித்து நாக சைதன்யா முதல்முறையாக பேசியிருக்கிறார்.