விவாகரத்துக்கு பிறகு முதல்முறையாக திருமணம் பற்றி போஸ்ட் போட்ட சமந்தா

Naga Chaitanya Divorce Samantha Ruth Prabhu
By Thahir Oct 28, 2021 05:54 AM GMT
Report

பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு நடிகை சமந்தா திருமணம் பற்றி சில அறிவுரை வழங்கியிருக்கிறார்.சமந்தாவும், அவரின் காதல் கணவரான நடிகர் நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பல் ஷேர் செய்த ஒரு வாசகத்தை சமந்தா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.

பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கான அறிவுரை அடங்கிய வாசகம் அது. சமந்தா ஷேர் செய்த போஸ்ட்டில் கூறியிருப்பதாவது, உங்கள் மகளை தகுதியுள்ளவராக ஆக்குங்கள்.

அப்படி செய்தால் யார் அவரை திருமணம் செய்து கொள்வார் என்று கவலைப்படத் தேவையில்லை. அவளின் திருமண நாளுக்காக பணம் சேர்த்து வைப்பதற்கு பதில் படிப்புக்காக செலவு செய்யுங்கள்.

அதிலும் முக்கியமாக திருமணத்திற்காக அவளை தயார் செய்யாமல் அவளாக இருக்க தயார் செய்யுங்கள்.

உங்கள் மகளுக்கு நம்பிக்கையை சொல்லிக் கொடுங்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மை காலமாக நடிகை சமந்தா விவகாரத்து ஆன நிலையில் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்பட்டு வந்தது.

இதையடுத்து அவர் குறித்தான பல்வேறு உண்மைக்கு புறம்பான செய்திகளும் வலம் வரத்தொடங்கியது.

இந்நிலையில் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துவிட்டதால் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

இதற்கிடையே ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கி வரும் இந்தி படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா நடிக்கவிருப்பதாக வதந்தி பரவியது.

You May Like This