சமந்தாவுக்கு என்ன ஆச்சு? மேனேஜர் கொடுத்த விளக்கம் - நடந்தது என்ன ?
நடிகை சமந்தா. திருமண உறவின் முறிவுக்கு பிறகு அவர் முடங்கிவிடுவார் என பலர் கூறிவந்த சூழலில் அதன் பிறகு அவரது நடிப்பு கிராஃப் ஏற தொடங்கியுள்ளது.
ஹாலிவுட் படத்திலும் அவர் கமிட்டாகியுள்ளார். மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு அவர் நடனமும் ஆடியுள்ளார். ஊ சொல்றியா மாமா இல்ல பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கடப்பாவிலிருந்து திரும்பிய சமந்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்திகள் வெளியாகின. மேலும் அவர் தெலங்கானாவில் காச்சிபௌலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இது குறித்து சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டவுடன், சமந்தாவின் மேலாளர், ' “மஜிலி' மற்றும் 'ஜானு' அழகி நலமாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டார்.
மேலும் அவர் அந்த அறிக்கையில், " சமந்தா ஆரோக்கியமாக உள்ளார். நேற்று அவருக்கு இருமல் இருந்ததால், மருத்துவமனையில் தன்னை பரிசோதித்துக்கொண்டார். சமந்தா தற்போது வீட்டில் இருக்கிறார், ஓய்வெடுத்து வருகிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளார்.