என் சொந்த விஷயம்..உங்கள் அரசியலில் என்னை இழுக்க வேண்டாம் - கடும் கோபத்தில் சமந்தா!
விவாகரத்து குறித்து பேசிய காங்கிரஸ் அமைச்சரின் பேச்சுக்கு நடிகை சமந்தா காட்டமாக பதிலளித்துள்ளார்.
சமந்தா
முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தன்னுடன் இணைந்து நடித்த நாக சைதன்யாவை காதலித்து, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பின்னர், இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் விவாகரத்து பெற்றனர். இதனிடையே, சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் தான் காரணம் என்று தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், கே.டி.ராமராவால், சமந்தாவைப் போல பல பெண்கள் திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டே சென்று விட்டதாகவும் குண்டை தூக்கிப் போட்டார். அமைச்சரின் இந்தக் கருத்துக்கு நடிகரும், சமந்தாவின் முன்னாள் மாமனாருமான நாகார்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சொந்த விஷயம்..
இந்த விவகாரம் தொடர்பாக சமந்தா கடும் கோபத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திரைத்துறையில் பல சிரமங்களை கடந்து ஒரு பெண்ணாக போராடிக் கொண்டிருக்கிறேன். அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய விவாகரத்து பரஸ்பரமானது. தயவு செய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை.
உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெற வேண்டும்.
உங்களின் அரசியல் சண்டையில் என் பெயரை இழுக்க வேண்டாம். அரசியலுக்கு அப்பாற்பட்டே இருக்கிறேன். அப்படியே இருக்கவே நான் ஆசைப்படுகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.