சமந்தா-ராஜ் நிடிமோரு திருமணம்; முன்னாள் மனைவி பதிவு வைரல்
ராஜின் முதல் மனைவி பதிவு கவனம் பெற்று வருகிறது.
சமந்தா திருமணம்
கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் சமந்தா மற்றும் ராஜ் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது.

சமந்தாவை போலவே ராஜ்க்கு இது இரண்டாவது திருமணம் இருவரும் தி ஃபேமிலி மேன் மற்றும் சிட்டாடல்: ஹனி பன்னி ஆகிய வெப்தொடர்களில் சேர்ந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மனைவி பதிவு
உதவி இயக்குனரான ஷ்யாமலி டேவை ராஜ் திருமணம் செய்து இருந்த நிலையில், இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில், ராஜின் முன்னாள் மனைவி ஷாமிலி போட்டு இருக்கும் இன்ஸ்டா போஸ்ட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில் "விரக்தி ஆனவர்கள் விரக்தி ஆன செயலை செய்வார்கள்" என்ற மைக்கேல் ப்ரூக்ஸின் வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார்.