அது இருந்துருக்கு.. நாக சைதன்யாவை பிரிந்ததற்கு காரணம்..? சமந்தா சொன்ன சீக்ரெட்!

Jiyath
in பிரபலங்கள்Report this article
நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யா குறித்து மறைமுகமாக பதிவிட்டுள்ளார்.
நடிகை சமந்தா
தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இந்த திருமண வாழ்க்கை வெகுநாள் நீடிக்கவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்தனர். இதற்கிடையில் பல ஹிட் படங்களில் நடித்து வந்த சமந்தாவுக்கு மயோசிடிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
பதிவு
இதனால் புதிய படங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஓய்வில் இருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் குஷி என்ற படம் வெளியானது.
சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா, தனது முன்னாள் கணவர் நாக சைதன்யா குறித்து மறைமுகமாக பதிவிட்டுள்ளார். அதில் "எனது வாழ்க்கையில் எடுத்த பல முடிவுகளில் என் பார்ட்னரின் influence இருந்திருக்கிறது. எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை கூட நான் இத்தனை காலம் மறந்துவிட்டு இருந்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.