கவர்ச்சியாக இருப்பது கடினமான வேலை - சமந்தா விளக்கம்
samantha
hardwork
By Irumporai
4 years ago
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் புஷ்பா ‘தி ரைஸ்’ . இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் அல்லு அர்ஜூனின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக படத்தின் “ oo antava mama ' பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாடல் குறித்தான சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் விதமாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அதில் “ நான் நன்றாக நடித்தேன் மோசமாகவும் நடித்துள்ளேன் நான் சீரியஸாக இருந்தேன், நான் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தேன், நான் எடுக்கும் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன் ஆனால் கவர்ச்சியாக இருப்பது அடுத்த கட்ட கடினமான வேலை.என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.