தன் நடிப்பை பார்த்து வெட்கத்தில் சமந்தாவை கட்டிப்பிடித்த லேடி சூப்பர் ஸ்டார் - வைரலாகும் வீடியோ

samantha movie nayantara சமந்தா நயன்தாரா video-viral காத்துவாக்குலரெண்டுகாதல்
By Nandhini Apr 18, 2022 07:20 AM GMT
Report

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்தபோது, நடிகை சமந்தாவிற்கு, நடிகை நயன்தாரா நட்பின் அடையாளமாக ஒரு அழகான காதணியை பரிசாக கொடுத்தார்.

அந்த பரிசை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாவில் புகைப்படத்தையோடு பதிவு செய்து வெளியிட்டார். அந்தப் பதிவில் நடிகை சமந்தா நயன்தாராவிற்கு நன்றி என்று கூறியிருந்தார்.

நடிகை சமந்தாவும், நயன்தாராவும் ஒருவர் மேல் ஒருவர் அன்பை பொழிந்து நட்புடன் பழகி வருகிறார்கள். இவர்களின் நட்பை அனைவரும் பாராட்டி வருகிறார்.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தை சமந்தாவும், நயன்தாரா பார்த்துக் கொண்டிருந்த போது, தன்னுடைய நடிப்பை பார்த்து, சமந்தாவை கட்டிப்பிணைத்துக் கொண்டு வெட்கத்தில் தலைகுனிந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.