சமந்தாவிற்கு பரிசு கொடுத்த நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்

Nayanthara Samantha gift சமந்தா நயன்தாரா பரிசு நெகிழ்ச்சிபதிவு
By Nandhini Mar 31, 2022 09:29 AM GMT
Report

 விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.

இப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஶ்ரீசாந்த் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதற்காக நடிகை சமந்தாவிற்கு, நடிகை நயன்தாரா நட்பின் அடையாளமாக ஒரு அழகான காதணியை பரிசாக கொடுத்திருக்கிறார்.

அந்த பரிசை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாவில் புகைப்படத்தையோடு பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் நடிகை சமந்தா நயன்தாராவிற்கு நன்றி கூறியுள்ளார்.   

சமந்தாவிற்கு பரிசு கொடுத்த நயன்தாரா - வைரலாகும் புகைப்படம் | Samantha Nayantara Gift