Tuesday, Jul 15, 2025

சமந்தா, நாகசைதன்யா பிரிவிற்கு இவர் தான் காரணம் - இடியை தூக்கி போட்ட நடிகை கங்கனா!

Naga Chaitanya Kangana Ranaut Aamir Khan Samantha Akkineni
By Anupriyamkumaresan 4 years ago
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in வதந்திகள்
Report

சமந்தா நாகசைதன்யா விவாகரத்து குறித்து நடிகை கங்கனா வெளியிட்டுள்ள பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் பிரபல ஜோடியாக வலம் வந்தவர்கள் சமந்தா நாகசைதன்யா ஜோடி.

சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகர் சைதன்யாவை திருமணம் கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமந்தா, நாகசைதன்யா பிரிவிற்கு இவர் தான் காரணம் - இடியை தூக்கி போட்ட நடிகை கங்கனா! | Samantha Nagachaithanya Divorce Kangana Comment

இந்நிலையில் சில மாதங்களாக சமந்தா மற்றும் நாகசைதன்யா இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும் விரைவில் பிரிய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று இருவரும் பரஸ்பரம் பிரிவதாகத் தெரிவித்திருந்தனர். நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் இந்த விஷயம் தான் மிகவும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை கங்கனா, சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து குறித்து வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய நடிகர் ஒருவர் நான்கு வருடங்கள் திருமண வாழ்க்கை மற்றும் பத்து வருடங்களுக்கும் மேலாக அந்த நடிகையுடன் உறவில் இருந்தார்.

சமந்தா, நாகசைதன்யா பிரிவிற்கு இவர் தான் காரணம் - இடியை தூக்கி போட்ட நடிகை கங்கனா! | Samantha Nagachaithanya Divorce Kangana Comment

சமீபத்தில் அவர் விவாகரத்து நிபுணர் என்று அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் ஒருவரை தொடர்பு கொண்டார். அந்த நடிகரை சந்தித்தவுடன் தான் நாகசைதன்யா விவாகரத்து முடிவை எடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

கங்கனா கூறும் அந்த விவாகரத்து நிபுணர் நடிகரும் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நட்புடன் தொடர்வதாக குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.