‘விட்டுக்கொடுத்து போய் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ - சமந்தா நாகசைதன்யா விவாகரத்து குறித்து மனம் திறந்த நாகர்ஜுனா
தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா.
இவர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாகர்ஜுனாவின் மகனும் டோலிவுட்டில் முன்னனி நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
சுமார் 4 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இந்த காதல் ஜோடி கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பிரிய போவதாக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் சமந்தா நாகசைதன்யா பிரிவு குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு நாகார்ஜுனா அளித்துள்ள பேட்டியில் பேசியிருக்கிறார்,
“நடிகை சமந்தா மிக வேகமாக எங்கள் குடும்பத்துடன் இணைந்து விட்டார். எங்கள் எல்லாரையும் நன்றாக பார்த்துக் கொண்டார்.
அது மட்டுமல்ல சமந்தா அனைவருடனும் மிகவும் ஜாலியாக இருப்பார். எனக்கும் என் மனைவி அமலாவுக்கும் சமந்தா ஒரு மருமகளாக இல்லாமல் ஒரு மகள் மாதிரி இருந்தார்.
நாகசைதன்யா -சமந்தா பிரியும் நிலை ஒன்று வரும் என நாங்கள் கனவில்கூட கற்பனை செய்யவில்லை. விவாகரத்து முடிவு எடுத்தது வேதனையாக இருக்கிறது.
அவர்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு வராமல் இருந்திருக்கலாம். இருவரும் விட்டுக்கொடுத்து போய் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
சமந்தா இப்போது எங்களுடன் சேர்ந்து இல்லாவிட்டாலும்கூட நான் அவரை எனது மகள் மாதிரிதான் பாவிக்கிறேன்.
அதுமட்டுமல்ல அவரும் அவரது சினிமா கேரியரும் இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும் என மனதார எதிர்பார்க்கிறேன். மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.