“உங்க சகவாசமே வேண்டாம்” - விவாகரத்துக்குப் பின் நாகசைதன்யா - சமந்தாவுக்கு ஏற்பட்ட சிக்கல்
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யாவின் விவாகரத்திற்குப் பின் இருவருக்கும் நெருக்கமான அவர்களின் நண்பர்கள் விலகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தனது கணவரும் நடிகருமான நாக சைதன்யாவை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனிடையே விவாகரத்து பிரச்சனையால் சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் நண்பர்களுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதாவது சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் பொதுவான நண்பர்களே அதிகம் என்பதால், அவர்கள் யார் பக்கம் நிற்பது என்ற சர்ச்சைக்குள் சிக்காமல் சமந்தா - நாக சைதன்யாவை விட்டு விலகி வருகின்றனர்.
இதற்கிடையில் குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும் , கருகலைத்ததாகவும் சமந்தா மீது சரமாரியாக வதந்திகளை பரப்பியதாக சில யூ-ட்யூப் சேனல்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
you might like this
https://youtu.be/rBWii48Yvlk