Tuesday, Jul 15, 2025

என் மாஜி கணவருக்கு முதல் மனைவி இருக்கா...? - போட்டுடைத்த சமந்தா - ஷாக்கான ரசிகர்கள்

samantha divorce நடிகை சமந்தா நாகசைதன்யா விவாகரத்து ரசிகர்கள் ஷாக் Naga-chaitanya first-wife முதல் மனைவி
By Nandhini 3 years ago
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்த நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக இருவரும் சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார்.

இவர்களது அறிவிப்பை கேட்டு ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் பிறகு தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயர் நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா.

மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான நடிகை சமந்தா, கோவில், சுற்றுலாவிற்கெல்லாம் சென்று வந்தார். பிறகு, தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி தன்னுடைய வேலையைப் பார்த்து வருகிறார்.

என் மாஜி கணவருக்கு முதல் மனைவி இருக்கா...? - போட்டுடைத்த சமந்தா - ஷாக்கான ரசிகர்கள் | Samantha Naga Chaitanya Divorce First Wife

சமீபத்தில் புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருந்தார். இப்பாட்டு வெளியான ஓரிரு நொடிகளிலேயே செம்ம வைரலாக பரவி பட்டித்தொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இந்நிலையில், நாக சைதன்யாவின் முதல் மனைவி யார் என்பதையும் சமந்தா போட்டுடைத்துள்ளார். இவர் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில் நாகசைதன்யா குறித்து பேசிய சமந்தா, ‘அவருக்கு pillow தான் முதல் மனைவி. அவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்றாலும் அந்த தலையணை நடுவில் இருக்கும்" என்று சமந்தா கூறியுள்ளார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.