சமந்தாவுடன் விவாகரத்து - என் மகன் நாகசைதன்யாவைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன் - நாகர்ஜூனா

samantha divorce naga-chaitanya
By Nandhini Mar 02, 2022 01:09 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.

கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா.

இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர். சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார்.

இப்பாட்டு வெளியான ஓரிரு நொடிகளிலேயே செம்ம வைரலாக பரவி பட்டித்தொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. பிரிவு குறித்து சமந்தாவும், நாக சைதன்யாவும் எந்த விளக்கமும் கொடுக்காமல், அவரவர் வேலையை மட்டும் பார்த்து வருகின்றனர்.

சமந்தாவுடன் விவாகரத்து - என் மகன் நாகசைதன்யாவைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன் - நாகர்ஜூனா | Samantha Naga Chaitanya Divorce

தற்போது, சமூகவலைத்தளங்களில் நாக சைதன்யா பற்றி அவரின் அப்பா நாகர்ஜுனா கூறிய தகவல் வைரலாகி வருகிறது.

நாகர்ஜூனா கூறுகையில், இந்த விவாகரத்து விஷயத்தில், என் மகன் அமைதியாக இருந்ததை பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவசரப்பட்டு ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை.

எந்த ஒரு அப்பாவையும் போன்று எனக்கும் அவரை நினைத்து கவலையில் இருந்தது. ஆனால் அவரோ என்னை நினைத்து கவலைப்பட்டார் என்றார்.

அப்பா, நீங்கள் ஓ.கே. தானே என்று அடிக்கடி என்னை கேட்டார். இதை நான் அல்லவா... உன்னிடம் கேட்க வேண்டும் சைதன்யா... என்றேன் என்று நாகர்ஜுனா கூறியுள்ளார்.

விவாகரத்து விஷயத்தை நாக சைதன்யா கையாண்ட விதத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

இதற்கு முன்பே, சமந்தா... எங்கள் குடும்பத்தை விட்டு சென்றுவிட்டாலும், அவர் என்றுமே எங்கள் மகள் தான்.... நாக சைதன்யாவும், சமந்தாவும் பிரிந்தது துரதிர்ஷ்டவசமானது.. என்று நாகர்ஜுனா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.