வெளியான அந்த புகைப்படம்... - கர்மா உங்களை சும்மா விடாது... - நாகசைதன்யாவை சாபம் விடும் சமந்தா ரசிகர்கள்...!
கர்மா உங்களை சும்மா விடாது என்று நாகசைதன்யாவை சமந்தா ரசிகர்கள் திட்டித்தீர்த்து சாபம் விட்டு வருகின்றனர்.
நடிகை சமந்தா -
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா. இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.
நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா -
நடிகை சமந்தாவின் யசோதா டிரெய்லரை தமிழில் சூர்யா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, கன்னடத்தில் ரஷ்கித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான், இந்தியில் வருண் தவான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
சமீபத்தில் நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் ரசிகர்களுக்கு தான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து இன்ஸ்டாகிராமில், சமந்தா தனது மணிக்கட்டில் டிரிப்சுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
வதந்தி சமீபத்தில், நடிகை சமந்தா உடல்நிலை மிகவும் மோசமடைந்து, ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இத்தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பிறகே தெரிந்தது. இது வெறும் வதந்தி என்று. தற்போது, சமந்தா தன் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் மருத்துவமனையில் இல்லை என செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்திருக்கிறார்.
நாகசைதன்யாவை திட்டித் தீர்க்கும் சமந்தா ரசிகர்கள்
சமந்தாவை பிரிந்த பிறகு பொன்னியின் செல்வன் படம் புகழ் சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சமந்தா உடல்நிலை சரியில்லாத நேரத்தில், நாக சைதன்யாவும், சோபிதாவும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவின் புகைப்படத்தின் பின்னணி பற்றி எதுவும் தெரியவில்லை.
ஆனால் அந்த புகைப்படத்தை பார்த்த சமந்தா ரசிகர்கள் மிகவும் கோபமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாக சைதன்யாவை சமூகவலைத்தளங்களில் திட்டி தீர்த்து, சாபம் விட்டுள்ளனர்.
சமந்தா ரசிகர்கள் பதிவிட்ட கமெண்ட்டில், உங்களை கர்மா சும்மா விடாது.... உங்களுக்கு சமந்தாவை விட சிறந்த மனைவி அமையமாட்டார்.... உங்களின் ஈகோ, குடும்பத்து ஈகோ தான் உங்களின் வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.