முன்னாள் கணவர் நாகசைதன்யாவை சந்தித்த சமந்தா - என்ன செய்தார்கள் தெரியுமா?
பிரிவுக்கு பிறகு முதல் முறையாக சமந்தாவும், நாக சைதன்யாவும் நேரில் சந்தித்தாக வெளியான தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தனது கணவரும் நடிகருமான நாக சைதன்யாவை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் பல படங்களில் அவர் பிசியாக நடிக்க தொடங்கியுள்ளார்.
இதனிடையே பிரிவுக்கு பிறகு முதல் முறையாக சமந்தாவும், நாக சைதன்யாவும் ஒரே இடத்தில் சந்தித்துள்ளார்கள். ராமநாயுடு ஸ்டியோஸுக்கு சமீபத்தில் பங்கரராஜு படப்பிடிப்புக்காக நாக சைதன்யாவும், யசோதா பட வேலைக்காக சமந்தாவும் வந்தார்கள்.
ஒரே இடத்தில் இருந்தபோதும் சமந்தாவும், நாக சைதன்யாவும் பேசிக்கொள்ளவில்லை என்றும், தங்கள் வேலை முடிந்ததும் காரில் கிளம்பிச் சென்றுவிட்டதாகவும் வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் பிரிந்துவிட்டாலும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்று தெரிவித்த சமந்தா விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து நாக சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கினார். ஒரே இடத்திற்கு சென்றும் பேசாமல் இருந்துள்ளது நீங்கள் சொன்னதெல்லாம் பொய்யா ? என ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.