Friday, Jul 4, 2025

அழகியே... இணையதளத்தை கலக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்.. - தெறிக்க விடும் ரசிகர்கள்..!

Samantha Viral Photos
By Nandhini 2 years ago
Report

தற்போது இணையதளத்தில் நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா. இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.

நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா -

சமீபத்தில் நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் ரசிகர்களுக்கு தான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்களுக்கு பேரிடியாக இருந்தது.

இதன் பின்பு, உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா, பிறகுமேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சமீபத்தில் நாடு திரும்பினார்.​

samantha-latest-photo-viral

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகை சமந்தா காற்றை சுவாசித்தப்படி ரம்மியமாக போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அடடா.. என்ன அழகு... அழகியே... என்று வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.