இதுதான் நடிகை சமந்தாவின் முதல் குழந்தையா? - இன்ஸ்டா பதிவை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
நடிகை சமந்தா தனது முதல் குழந்தை தன்னை மிகவும் மிஸ் செய்வதாக இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விட்டு கடந்த மாதம் பிரிந்ததையடுத்து, ஹைதராபாத்தில் தனியாக வசித்து வருகிறார். அதன்பின் ஆன்மீக பயணம் மேற்கொண்ட அவர் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சில தினங்களுக்கு வருகை தந்தார்.
ஆனால் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் பெய்த மழை சமந்தாவையும் வீட்டிலேயே முடக்கியது. இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதில் ஒன்று மழை சூழ்ந்த சுற்றுப்புறத்தின் ஒரு காட்சி. இன்னொன்று ஹைதராபாத்தில் உள்ள தனது நாய்களான ஹாஷ் மற்றும் சாஷாவின் மற்றொரு புகைப்படமாகும்.
ஹாஷ் மற்றும் சாஷாவின் படத்தில் "நான் ஒருநாள் இல்லை... என் சோகமான முதல் குழந்தை" என்று குறிப்பிட்டுள்ளார். ஹாஷ் நிச்சயமாக தனது இளைய சகோதரி சாஷாவை விட மிகவும் சோகமாக இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவர்கள் தங்கள் அம்மாவை சென்னையில் நீண்ட நாட்கள் தங்க விடமாட்டார்கள் போல் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.