சமந்தாவின் ஃபிட்னெஸ் ரகசியம் இதுதானா? - இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோவால் பரபரப்பு

actresssamantha சமந்தா
By Petchi Avudaiappan Jan 08, 2022 11:21 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் அவர் புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ..சொல்றீயா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 அவர் தனது பயிற்சியாளரின் உதவியுடன் ஹெவிவெயிட் லைட்டை தூக்கும் ஒர்க்அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவிற்கு, "தாழ்ந்து போ அல்லது வீட்டிற்குச் செல்லுங்கள், எனது படிவத்தை சரிசெய்கிறேன்" என்று தலைப்பிட்டுள்ளார். அவரின் இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தாவின் ஃபிட்னெஸ் ரகசியம் இதுதானா? - இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோவால் பரபரப்பு | Samantha Instagarm Story Goes To Viral