படப்பிடிப்பின் போது வாகனம் விபத்து நடிகை சமந்தா காயம் - ரசிகர்கள் அதிர்ச்சி..!
நடிகை சமந்தா,நடிகர் விஜய் தேவரகொண்டா பங்கேற்ற சண்டை காட்சியின் படப்பிடிப்பின் போது வாகனம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இருவரும் இணைந்து நடித்து வரும் குஷி என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சண்டைக்காட்சிக்காக ஆற்றின் குறுக்கே சமந்தா,விஜய் தேவரகொண்டா ஆகியோர் வாகனத்தில் செல்வது படம் ஆக்கப்பட்டது.
அப்போது எதிர்பாரதவிதமாக அந்த வாகனம் கவிழ்ந்ததில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவருக்கும் பிசியோதெரபிஸ்ட் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படப்பிடிப்பின் போது வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் சமந்தா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.