படுத்த படுக்கையில் இருந்தாலும் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு உதவி செய்த சமந்தா
படுத்த படுக்கையாக இருந்த நிலையிலும் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு நடிகை சமந்தா உதவியுள்ளார்.
உதவி செய்த சமந்தா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் அண்மை காலமாக மயோசிடிஸ் நோயால் பாதிக்கபட்ட நிலையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷிற்கு உதவி செய்து தற்போது வெளியிட்டு உதவி செய்துள்ளார் நடிகை சமந்தா. கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள புதிய படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு உதவி செய்துள்ளார் நடிகை சமந்தா.
இயக்குநர் சந்துரு இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்து ரிவால்டர் ரீட்டா படத்தில் நடிக்க உள்ளார். அதன் அறிவிப்பை தான் தற்போது நடிகை சமந்தா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில் வெளியான சாணிக் காயிதம் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், தனது அடுத்த உமன் சென்ட்ரிக் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தொடரும் நட்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்து வந்த கீர்த்தி சுரேஷிற்கு பெரிய ஸ்டார் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு குறைந்துவிட்டது.
உதயநிதி ஸ்டாலினுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக காத்திருக்கிறது. சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து நடிகையர் திலகம் மற்றும் சீமராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
இதன் மூலம் இருவருக்கும் இடையேயான நட்பு வளரந்துள்ளது. இந்த நிலையில் அந்த நட்பு காரணமாக தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ள போஸ்டரை வெளியிட்டுள்ளார் சமந்தா.
Wishing some of my favourite people the very best ♥️@KeerthyOfficial @Jagadishbliss #RevolverRita Looking forward to this !! ?@dirchandru @dineshkrishnanb @Cinemainmygenes @Aiish_suresh @TheRoute @PassionStudios_ pic.twitter.com/1pqdOutCE8
— Samantha (@Samanthaprabhu2) January 14, 2023