சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் திருமண வாழ்விலிருந்து பிரிந்த நிலையில், இருவரும் அறிவிப்பினை வெளியிட்டனர்.
தற்போது நாக சைதன்யா நேற்றைய அறிவிப்புக்கு பின்பு தற்போது தான் நடித்த லவ் ஸ்டோரி படத்தின் பாடல் காட்சியினை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்த தெலுங்கு படமான லவ் ஸ்டோரி கடந்த 24ம் திகதி திரையரங்கில் வெளியாகி பயங்கர வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடந்த நிலையில் இதில் சிறப்பு விருந்தினராக நாகர்ஜுனா கலந்து கொண்டு தனது மகன் நாக சைதன்யாவை குறித்து கண்கலங்கும் விதமாக பேசினார்.
தற்போது நாக சைதன்யா திருமண வாழ்வின் பிரிவை வெளியிட்ட பின்பு எப்பொழுது மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிக்கை வெளியிட்ட மறுநாளே படத்தின் ரொமான்ஸ் காட்சியினை வெளியிட்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.