விவாகரத்து முடிவு சரிதான், எதிர்த்து போராடு - சமந்தாவுக்கு அட்வைஸ் கூறிய தாய்!

mom Samantha Ruth Prabhu advises
By Anupriyamkumaresan Oct 23, 2021 10:34 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

தனது நெருங்கிய தோழி மற்றும் சில நண்பர்களுடன் இந்த ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டிருந்த சமந்தா ஆன்மீக பயணம் நிறைவடைந்ததாக தனது தோழி ஷில்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாக்களில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா. தற்போது ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சமந்தா சமீபத்தில் விவாகரத்து பெற்றார். அதனால் ஏற்பட்ட வேதனையுடன் சேர்த்து தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவரின் விவாகரத்து குறித்தான வதந்திகளும் கூடுதல் மன உளைச்சலை சமந்தாவிற்கு ஏற்படுத்திவிட்டதாம். இதனால் அதிலிருந்து வெளிவர ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகின்றார்.   

விவாகரத்து முடிவு சரிதான், எதிர்த்து போராடு - சமந்தாவுக்கு அட்வைஸ் கூறிய தாய்! | Samantha Divorce Issue Mom Said Comment Samantha

மேலும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் நீ இப்போது எப்படியாக இருக்கிறாயோ அதற்கு மகிழ்ச்சியாக இரு, எதிர்காலத்தில் உனக்கு என்ன வேண்டுமோ அதற்கு போராடு என தனது அம்மா கூறியதாக ஒரு பதிவினை ஷேர் செய்துள்ளார்.