ஒருவேளை சமந்தாவுக்கு விவாகரத்து கிடைத்தால் அடுத்து இதுதான் - வெளியான புதிய தகவல்

 திரைப்படங்களில் அதீத கவர்ச்சியாக நடிப்பது தான் சமந்தா - நாகசைதன்யா இடையே பிரச்சனை ஏற்பட காரணம் என கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த 2010 ஆம் ஆண்டு யே மாயா சேசவே என்ற தெலுங்கு படத்தில் நாகசைதன்யாவுடன் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இருவரும் 7 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் 2017ஆம் ஆண்டு அக்டோபரில் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே கடந்த சில வாரங்களாக நடிகை சமந்தா தனது கணவரை பிரிய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

சமந்தா கவர்ச்சியாக நடிப்பது மற்றும் போட்டோஷூட்டுகளில் கலந்து கொள்வது அவரின் கணவரின் குடும்பத்தாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும், இதுதொடர்பாக சமந்தாவிடம் பலமுறை பேசியும் பலனிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே விவாகரத்து முடிவு வரை சென்ற இந்த விவகாரத்தில் இருவரும் குடும்ப நீதிமன்றத்தில் பலமுறை கவுன்சிலிங் பெற்றதாகவும், ஆனால் சுமூகமான முடிவு ஏற்படவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றது. ஒருவேளை சமந்தா விவாகரத்து பெற்றால் அதன் மூலம் ரூ. 50 கோடி ஜீவனாம்சம் கிடைக்குமாம் என்ற புதிய தகவலும் வெளியாகியுள்ளது.  

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்