நோயால் அவதிப்படும் நடிகை சமந்தா - குணமடைய வாழ்த்து தெரிவித்த முன்னாள் கணவர் தம்பி..! - ரசிகர்கள் நெகிழ்ச்சி

Samantha
By Nandhini Oct 31, 2022 12:44 PM GMT
Report

நோயால் அவதிப்படும் நடிகை சமந்தா விரைவில் குணம் பெற முன்னாள் கணவர் தம்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா. இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.

samantha-disease

நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா

நடிகை சமந்தாவின் யசோதா டிரெய்லரை தமிழில் சூர்யா, தெலுங்கில் விஜய்தேவரகொண்டா, கன்னடத்தில் ரஷ்கித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான், இந்தியில் வருண் தவான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் ரசிகர்களுக்கு தான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து இன்ஸ்டாகிராமில், சமந்தா தனது மணிக்கட்டில் டிரிப்சுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

வாழ்த்திய முன்னாள் கணவர் தம்பி

தற்போது சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யாவின் தம்பி அகில் சமந்தா குணமடைய வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'அனைவரது அன்பும், வலிமையையும், எப்போதும் இருக்கும் டியர் சாம் என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த சமந்தாவின் ரசிகர்கள், நாக சைதன்யாவின் குடும்பத்தினர் சமந்தா மீது அன்பாக இருந்து வருகின்றனர் என்று பதிவிட்டுள்ளனர்.