75-வது சுதந்திர தினத்தையொட்டி விண்வெளியிலிருந்து வாழ்த்து தெரிவித்த சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி...!

Independence Day
By Nandhini Aug 13, 2022 08:26 AM GMT
Report

75-வது சுதந்திர தினத்தையொட்டி விண்வெளியிலிருந்து சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி

இத்தாலியின் முதல் விண்வெளி வீராங்கனையான கிறிஸ்டோஃபோரெட்டி (Samantha Cristoforetti) முதன் முதலில் 2014ம் ஆண்டு விண்வெளிக்குச் சென்றார். அங்குள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் 199 நாட்கள் செலவழித்தார். அன்றைய தேதியில், விண்வெளியில் மிக நீண்ட நாட்கள் இருந்த பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 

Samantha Cristoforetti

75-வது சுந்திர தின வாழ்த்து 

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 75-வது சுந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், 75-வது சுந்திர தினத்தையொட்டி, சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட நாட்களாக தங்கியுள்ள விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோ ஃபோரெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், 75-வது சுந்திர தின வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் வெற்றி பெற வேண்டும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்து என்று பதிவிட்டுள்ளார். 

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.