சிறைக்கு போக வேண்டும்; வெடித்த சர்ச்சை - விளக்கம் கொடுத்த நடிகை சமந்தா!

Samantha Indian Actress
By Sumathi Jul 05, 2024 07:06 AM GMT
Report

மருத்துவ சிகிச்சை குறித்து பரவிய சர்ச்சைக்கு சமந்தா விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகை சமந்தா

சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.

samantha

இதுதொடர்பான புகைப்படங்களையும், சிகிச்சை முறையையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தனது மூக்கில் நெபுலைசருடன் கூடிய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, ’வைரல் மருந்து எடுக்கும் முன்பு, நீங்கள் இந்த மாற்று வழியை முயற்சி செய்து பாருங்கள்.

சிறைக்கு போக வேண்டும்; வெடித்த சர்ச்சை - விளக்கம் கொடுத்த நடிகை சமந்தா! | Samantha Clarification On Recent Medicine Contro

ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்யலாம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

பிரிவுக்கு பின் ஒன்றாக முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன்... காலில் விழப்போன சமந்தா!

பிரிவுக்கு பின் ஒன்றாக முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன்... காலில் விழப்போன சமந்தா!

சர்ச்சைக்கு விளக்கம்

இதில் ‘தி லிவர் டாக்’ என்ற ஐடியுடன் கூடிய மருத்துவர் ஒருவர், அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை நிறுவனம் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆபத்து என்று சொல்லி, நெபுலைஸ் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கிறது. அப்படி இருக்கும் போது சமந்தா இதை சொல்லி இருப்பதால், அவர் சிறைக்கு செல்ல வேண்டும் என விமர்சித்திருந்தார்.

தற்போது இதற்கு விளக்கமளித்துள்ள சமந்தா, என் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் விஷயத்தைத் தான் நான் கூறுகிறேன். ஹைட்ரஜன் பெராக்சைடு எனக்கு பரிந்துரைத்த மருத்துவரும் எம்டி முடித்து, 25 வருடங்களுக்கு மேலாக பணியனுபவம் கொண்டவர் தான். நான் தவறாக பரிந்துரைக்கிறேன்.

சிறைக்குச் செல்ல வேண்டும் என்று குற்றம் சாட்டிய மருத்துவரின் பதட்டத்தையும் அவரின் நல்ல நோக்கத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. என்னுடைய மருத்துவரையும் அவரையும் அமர வைத்து கலந்துரையாடல் நடத்த வேண்டும். மற்றபடி, என்னுடைய நோக்கம் அடுத்தவர்களுக்கு உதவுவதே தவிர, காயப்படுத்துவது அல்ல!’ எனத் தெரிவித்துள்ளார்.