நீச்சல் உடையில் அழகை அள்ளித் தெளிக்கும் சமந்தாவின் வைரல் புகைப்படம்
நடிகை சமந்தா கோவா பீச்சில் எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தனது கணவரும் நடிகருமான நாக சைதன்யாவை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் பல படங்களில் அவர் பிசியாக நடிக்க தொடங்கியுள்ளார்.
இதனிடையே விவாகரத்து ஆன கையோடு, ரிஷிகேஷ், உத்தரகாண்ட் என ஆன்மிக சுற்றுலா சென்ற நடிகை சமந்தா அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். சமீபத்தில் கூட புஷ்பா படத்தில் ஓ...சொல்றியா மாமா... பாடலுக்கு நடனமாடி கடும் எதிர்ப்புகளைப் பெற்றார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது கோவாவில் தனது நண்பர்களுடன் எடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நீச்சல் உடையில் அவர் இருக்கும் புகைப்படங்களை பார்த்த பலரும் உங்களுக்கு கொஞ்சம் கூட ஃபீலிங் இல்ல..லைஃப் நல்லா என்ஜாய் பண்றீங்க என பதிவிட்டுள்ளனர்.