நடிகை சமந்தாவுக்கு இப்படி ஒரு நல்ல மனசா - என்ன செய்தார் தெரியுமா?
சக நடிகை காஜல் அகர்வால் குறித்து நடிகை சமந்தா சொன்ன கருத்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் அவர் புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ..சொல்றீயா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார். இதனிடையே நடிகை காஜல் அகர்வால் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யும் டெஸ்ட் கிட் விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பர வீடியோவை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார்.
வீடியோவை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் காஜலுக்கு வாழ்த்து தெரிவிக்க சமந்தாவும் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் க்யூட்டி...ஜொலிக்கிறீர்கள்.... லாட்ஸ் ஆஃப் லவ் காஜ்... உங்களுக்காக சந்தோஷப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் ஆசைப்பட்டது நடக்காவிட்டாலும், காஜலுக்கு தாயாகும் வாய்ப்பு கிடைத்திருப்பதை பார்த்து சந்தோஷப்படும் மனசுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும் என ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.