நிம்மதியாக வாழ கடலோரம் வீட்டை தேடி வாங்கிய சமந்தா - எத்தனை கோடி தெரியுமா?
நடிகை சமந்தா கடலோரம் ஒரு அபார்மண்டை ஒன்றை பல கோடி கொடுத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மீண்டு வரும் நடிகை சமந்தா
நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அந்த நோயில் இருந்து அவர் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்.
இதையடுத்து அவர் திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும் அந்த படங்களில் நடிக்கவும் தொடங்கியுள்ளார். இதைதொடர்ந்து குஷி, வருண் தவானுடன் இணைந்து நடிக்கவிருக்கும் “சிட்டாடல்” வெப் தொடர் ஆகியவற்றில் நடிக்க தொடங்கிவிட்டார்.
புதிய வீடு வாங்கிய சமந்தா
இதனிடையே நடிகை சமந்தா மும்பையில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். மூன்று படுக்கையறைகளை கொண்ட ஆடம்பரமான அபார்ட்மெண்டை கடற்கரையை பார்த்து ரசிக்கும் படி ஒரு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சமந்தா சூரியன் அஸ்தமன காட்சியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படமும் அவர் புதிதாக வாங்கியுள்ள அபார்ட்மெண்ட் வீட்டில் இருந்ததுதானாம்.
கிட்டத்தட்ட இந்த வீட்டை சமந்தா 15 கோடிகளுக்கு வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
மேலும் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலம் திரைப்படம் முன்னதாக பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.