சிரிப்பில் கிறங்கடித்து... அழகிய சிற்பமாய் ஜொலிக்கும்... சமந்தாவிற்கு இன்று பிறந்தநாள் - இணையத்தில் கொட்டும் வாழ்த்துமழை

Samantha
By Nandhini Apr 28, 2022 05:13 AM GMT
Report

தென்னிந்திய சினிமாத்துறையில் முன்னணி நட்சத்திரமாகவும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா.

இவருடைய சிரிப்பிலும், அழகிலும் மயங்காதவர் யாருமில்லை. அந்த அளவிற்கு கொள்ளையழகில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடிக்கிறார் நடிகை சமந்தா.

வாழ்க்கையில் எவ்வளவு தோல்விகள் வந்தாலும்... அதை தைரியத்துடன் போராடி தனக்கென பாதையை வகுத்து அதில் வெற்றி மலராய் பூக்கும் நடிகை சமந்தாவிற்கு இன்று பிறந்தநாள். 

நடிகை சமந்தா தன்னுடைய 35-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருடைய பிறந்தநாளான இன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இவருடன் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், சமந்தாவின் பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை அள்ளி தெறித்து வருகின்றனர்.