பிக் பாஸ் - 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகும் பிரபல நடிகை - வெளியாக தகவல் - குஷியில் ரசிகர்கள்

Samantha
By Nandhini Jun 02, 2022 01:27 PM GMT
Report

இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று வெளியான எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி என்றால் அது ‘பிக்பாஸ்’ மட்டும்தான். பிரபல விஜய் டிவியில் தமிழில் கடந்த சீசன் 5 ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

அதே மாதிரி, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார். தமிழைப் போலவை தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

இதில், கடந்த 3 சீசன்களை தொகுத்து வழங்கி வந்த நகர்ஜூனா, 6 சீசனை தொகுத்து வழங்கமாட்டேன் என்று கூறிவிட்டார். ஏற்கெனவே கடந்த 2020ம் ஆண்டு நகர்ஜூனா ஷூட்டிங் சென்ற போது நடிகை சமந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது. எனவே, இந்த முறை முழு தொகுப்பாளராக தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6-ஐ தொகுத்து வழங்க பிரபல நடிகை சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் - 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகும் பிரபல நடிகை - வெளியாக தகவல் - குஷியில் ரசிகர்கள் | Samantha Bigboss

பிக் பாஸ் - 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகும் பிரபல நடிகை - வெளியாக தகவல் - குஷியில் ரசிகர்கள் | Samantha Bigboss