நோயால் அழகெல்லாம் போச்சு - நக்கலடித்த நபருக்கு தரமான பதிலடி கொடுத்த சமந்தா

Samantha Indian Actress
By Sumathi Jan 10, 2023 09:49 AM GMT
Report

சமந்தாவின் நோய் பாதிப்பு குறித்து கமெண்ட் செய்த நபருக்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

சமந்தா

நடிகை சமந்தா அரிய வகை தசை அழற்சி நோயான ‘மயோசிட்டிஸ்’ எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் வெளியே எங்கும் செல்லாமல், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை ‘யசோதா’ படத்தின் ப்ரோமஷனின் போது தெரிவித்திருந்தார்.

நோயால் அழகெல்லாம் போச்சு - நக்கலடித்த நபருக்கு தரமான பதிலடி கொடுத்த சமந்தா | Samantha Befitting Reply To Netizen

சிகிச்சைக்காக சமந்தா தென்கொரியாவுக்கு சென்றுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறப்பட்டது. இதனையடுத்து, சிகிச்சை முடிந்து சமந்தா நாடு திரும்பி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்நிலையில், சமந்தா சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்களை பகிர்ந்த நெட்டிசன் ஒருவர்,

பதிலடி

சமந்தாவின் அழகெல்லாம் போய்விட்டது. இதற்காக வருத்தப்படுவதாக பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த சமந்தா, “மாதக்கணக்கான சிகிச்சையும், மருந்துகளும் எடுத்துக்கொள்ளும் நிலை

நோயால் அழகெல்லாம் போச்சு - நக்கலடித்த நபருக்கு தரமான பதிலடி கொடுத்த சமந்தா | Samantha Befitting Reply To Netizen

என்னைப்போல் உங்களுக்கும் வந்துவிடக்கூடாது என நான் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் அழகு பிரகாசமாக என்னிடமிருந்து அன்பைத் தருகிறேன்” என பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.