"இருவரும் நெருக்கமாகத்தான் இருந்தார்கள், சமந்தா தான் முதலில் விவாகரத்து வேண்டும் என கேட்டார்" - நாகர்ஜூனா

samantha first opens up naga chaitanya naga arjuna divorce issue samantha asked
3 மாதங்கள் முன்

"சமந்தா தான் முதலில் விவாகரத்து வேண்டும் என கேட்டார்" என நாகர்ஜூனா தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து முதன்முதலாக பேசியுள்ள நாகர்ஜூனா,

“சமந்தா தான் முதலில் விவாகரத்து வேண்டும் என்று விண்ணப்பித்தார். நாக சைதன்யா, சமந்தாவின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்தாலும், நான் என்ன நினைப்பேன், குடும்ப பெயர் என்னவாகும் என்பது குறித்து மிகவும் கவலைப்பட்டார்.

நான் மிகவும் கவலைக்கு உள்ளாகுவேன் என நினைத்த நாக சைதன்யா எனக்கு ஆறுதல் கூறினார். 4 வருடம் அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற பிரச்சினை அவர்களுக்குள் வந்ததில்லை.

இருவரும் நெருக்கமாகத்தான் இருந்தார்கள். ஆனால் இப்படியான முடிவை அவர்கள் எடுக்க என்ன காரணம் என எனக்கு தெரியவில்லை.

2021-ம் புத்தாண்டை கூட ஒன்றாகத்தான் கொண்டாடினார்கள். அதன் பிறகுதான் அவர்களுக்குள் ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

முன்னதாக, தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.

இவரும் பிரபல தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார்.

இதனிடையே சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் விவாகரத்து முடிவை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.