‛சமந்தா என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி’ - மேடையில் அல்லு அர்ஜூன் புகழாரம்

samantha viral news Allu Arjun o solriya mama
By Nandhini Dec 29, 2021 09:31 AM GMT
Report

 தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் புஷ்பா படத்தில் குத்துப்பாடலுக்கு நடனம் ஆடியது பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டடித்துள்ளது. ஆனால், ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியது, சமந்தாவின் ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா ஆடிய பாடலின் வரிகள் ஆண்களை குற்றம் சாட்டுவது போல அமைந்திருந்தது. இதனால் பல ஆண்கள் அமைப்புகள் ஆரம்பத்தில் கொந்தளித்தது. ஆனால், இப்பாடல் சமூக வலைத்தளமான யூடியூப் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 100 பாடல்கள் லிஸ்டில் சமந்தாவின் o antava maama oo antava முதலிடம் முடித்திருக்கிறது. இது சமந்தாவை மட்டுமல்லாமல் படக்குழுவினரையும் சந்தோஷப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் வெற்றி குறித்தும், அதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி செலுத்தும் விதமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார்.

அப்போது, நடிகை சமந்தா குறித்து அல்லு பேசியதாவது -

நடிகை சமந்தா காரு இந்த பாடலை செய்ததற்கு மிக்க நன்றி. நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காகத்தான் இந்த பாடலை நீங்கள் செய்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே அதற்கு நன்றி.

இதை செய்வது சரியா தவறா என்று உங்களுக்கு எத்தனை சந்தேகங்கள் இருந்தது அது எனக்கு படப்பிடிப்பின் போதே தெரிந்திருந்தது. அதனால்தான் உங்களிடம் ஒன்று மட்டும் சொன்னேன். ‘என்னை நம்பி இதை செய்’ என்றேன். அதன் பிறகு என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.

எல்லாவற்றையும் செய்ததற்கு நன்றி. நீங்கள் என் இதயத்தையும், மரியாதையையும் வென்று விட்டீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அந்த வீடியோவை ஷேர் செய்த சமந்தா, “நான் எப்போதுமே உன்னை நம்புவேன் அல்லு அர்ஜூன்’ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.