‘’நாகார்ஜுனா மாமா’’ - வைரலாகும் சமந்தாவின் ட்வீட்

Nagarjuna fatherinlaw Samantha Akkineni
By Irumporai Sep 22, 2021 06:43 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது லேட்டஸ்ட் கேள்வி ஒன்று தீயாக பரவிக்கொண்டிருக்கிறது, ஆம் சமந்தாவும் நாக சைதன்யா அக்கினேனியும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் இல்லைப் பிரியப் போகிறார்களா? பரபரப்பான இந்தத் தகவலுக்காக ஒரு பெருங்கூட்டமே காத்திருக்கிறது.

இந்த நிலையில் அண்மையில் நடிகரும் சமந்தாவின் மாமனாருமான நாகர்ஜூனா அவரது தந்தை நாகேஸ்வர ராவின் பிறந்தநாளை ஒட்டி ஒரு நினைவஞ்சலி வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்தார். இந்த வீடியோவைப் பார்த்த சமந்தா அதன் கீழே, இது மிகவும் அழகாக இருக்கிறது @iamnagarjuna என்று நாகர்ஜூனாவை டேக் செய்து தனது கருத்தைப் பதிவிட்டார்.

பிறகு உடனே அந்த ட்வீட்டை டெலீட் செய்துவிட்டு மீண்டும் பதிவிட்டார். இந்த முறை, இது மிகவும் அழகாக இருக்கிறது @iamnagarjuna மாமா, என்று மரியாதை அடைமொழியுடன் பகிர்ந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சமந்தாவும் நாகசைதன்யாவும் பிரியப்போகின்றார்கள் என்ற செய்தி பரவிய நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பகிர்ந்த பதிவு இது. அண்மையில் திருப்பதி சென்ற அவரிடம் நிருபர் ஒருவர், கணவருடனான கருத்து வேறுபாடு குறித்து கேட்க கோபமடைந்த சமந்தா, நான் கோயிலுக்கு வந்துள்ளேன். உங்களுக்கு அறிவே கிடையாதா என்று கேட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.