திருமலையில் நடிகை சமந்தா சாமி தரிசனம்

Actor Samantha Akkineni
By Thahir Sep 19, 2021 02:32 AM GMT
Report

திருமலையில் நடிகை சமந்தா சனிக்கிழமை வழிபாடு செய்தாா். முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு திருமலைக்கு வந்து தங்கிய அவா், சனிக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் வழிபட்டாா்.

தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதம், சேஷ வஸ்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

திருமலையில் நடிகை சமந்தா சாமி தரிசனம் | Samantha Akkineni Actor

அவற்றை பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியில் வந்த அவா் ஏழுமலையானை தரிசித்து மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தாா்.

அவருடன் முக்கிய பிரமுகா்களான நகரி எம்எல்ஏ ரோஜா மற்றும் சித்தூா் மாவட்ட பாஜக நிா்வாகி பானுபிரகாஷ் ரெட்டி உள்ளிட்டோா் ஏழுமலையானை தரிசித்தனா்.