காதல் கணவனை விட்டு பிரியும் பிரபல நடிகை - காரணம் என்ன?

Samantha Samantha Akkineni
By Thahir Aug 09, 2021 08:17 AM GMT
Report

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜுனா அகினேனியின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காதல் கணவனை விட்டு பிரியும் பிரபல நடிகை - காரணம் என்ன? | Samantha Akkineni

திருமணத்திற்கு பிறகு ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் தன் பெயரை சமந்தா அகினேனி என்று மாற்றினார். இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் இருந்து அகினேனியை நீக்கிவிட்டு தன் பெயரை S என்று மாற்றியது அனைவருக்கும் தெரியும்.

சமந்தாவின் இந்த செயலை பார்த்த சமூக வலைதளவாசிகள் வேறுவிதமாக பேசுகிறார்கள். அவர்கள் கூறியிருப்பதாவது,

ஒரு வேளை சமந்தா தன் கணவர் நாக சைதன்யாவை பிரியப் போகிறார் போன்று. அதனால் தான் முதலில் சமூக வலைதளங்களில் இருந்து அகினேனியை நீக்கிவிட்டார். பிரபலங்கள் தங்கள் கணவர் அல்லது காதலரை பிரிந்தால் முதலில் சமூக வலைதளங்களில் தான் ஏதாவது செய்வார்கள்.

சமந்தாவின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது என்று பார்த்தால் என்னாச்சு என்று தெரியவில்லையே என்கிறார்கள்.

தன் பெயரை இஷ்டப்படி மாற்ற சமந்தாவுக்கு உரிமை உண்டு. இந்நிலையில் தான் அவரின் செயலுக்காக ஆளாளுக்கு ஒரு விதமாக பேசுகிறார்கள்.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவை வாழ்த்தி ட்வீட் செய்திருக்கிறார் சமந்தா. அதை பார்த்த தளபதி ரசிகர்கள் சிலரோ, மகேஷ் பாபுவை வாழ்த்த நேரமிருக்கிறது ஆனால் விஜய்ணாவை வாழ்த்த மட்டும் இல்லையா என கேட்டுள்ளனர்.