அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகை சமந்தா..? - மற்றொரு பாதிப்பு!

Jiyath
in பிரபலங்கள்Report this article
நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவொன்று அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் இவருக்கு மயோசிடிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் புதிய படங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஓய்வில் இருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் குஷி என்ற படம் வெளியானது.
மற்றொரு பாதிப்பு
இந்நிலையில் அவ்வப்போது தனது உடல்நிலை குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் சமந்தா, தற்போது தனக்கு மற்றொரு பாதிப்பு இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
அதில் "பூக்கள் எவ்வளவு அழகானவை அவற்றை பார்த்தால் மனதுக்குள் இனம் புரியாத சந்தோஷம் உண்டாகும். ஆனால் அதனால் தனக்கு அலர்ஜி ஏற்பட்டு முன்பு எமர்ஜென்சி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டேன் " என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.