வெப் சீரிஸில் நிர்வாணமாக நடிக்கும் சமந்தா..அதிர்ச்சியில் ரசிகர்கள்

web series Actress samantha
By Petchi Avudaiappan Aug 28, 2021 01:10 AM GMT
Report

 கொரியன் வெப் சீரிஸ் ரீமேக்கில் நடிகை சமந்தா ஆடையில்லாமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா கடைசியாக தெலுங்கில் ஜானு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் ரீமேக் ஆகும்.

தற்போது விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல், தி ஃபேமிலி மேன் என்ற தொலைக்காட்சி தொடரிலும் சமந்தா நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு உச்சம் சென்ற அவரின் சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.

தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் காரியத்துக்காக படுக்கையை பகிரும் இலங்கை தமிழ் பெண்ணாக சமந்தா நடித்திருந்தார். இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்காக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிகை சமந்தா ஆடையின்றி நிர்வாணமாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரியன் வெப் சீரிஸ் ஒன்று தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் இடம்பெறும் சில காட்சிகளில் அவர் ஆடையில்லாமல் தோன்ற உள்ளார்.