படக்குழுவினருக்கு குட் நியூஸ் சொன்ன நடிகை சமந்தா... - தீயாய் பரவும் தகவல்..!
நடிகை சமந்தா படக்குழுவினருக்கு சொன்ன குட் நியூஸ் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நடிகை சமந்தா -
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.
கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா. இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.
நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா -
நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் ரசிகர்களுக்கு தான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து இன்ஸ்டாகிராமில், சமந்தா தனது மணிக்கட்டில் டிரிப்சுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
வதந்தி
சமீபத்தில், நடிகை சமந்தா உடல்நிலை மிகவும் மோசமடைந்து, ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இத்தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பிறகே தெரிந்தது. இது வெறும் வதந்தி என்று. தற்போது, சமந்தா தன் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் மருத்துவமனையில் இல்லை என செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்தார்.
படக்குழுவினருக்கு குட் நியூஸ் சொன்ன சமந்தா
ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து ‘குஷி’ படத்தில் நடித்து வந்தார் நடிகை சமந்தா.
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றபோது நள்ளிரவில் ஷூட்டிங் என்று கூறி சமந்தாவின் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர் படக்குழுவினர். இப்படம் டிசம்பர் 23ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சிகிச்சைக்காக சமந்தா அமெரிக்காவுக்கு சென்றதால் படப்பிடிப்பு தடைப்பட்டது.
இன்னும் நிறைய காட்சிகளை படமாக்க வேண்டி இருப்பதால், குஷி படம் வரும் 2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், சமீபகாலமாக சமந்தா உடல்நிலை குறித்து பரவி வந்த வதந்திகள் அனைத்தும் பொய் என்று உறுதிசெய்வது போல, தற்போது சமந்தா ‘குஷி’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக படக்குழுவினரிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.