யார் யாரை காதலிச்சாலும் எனக்கு கவலை இல்லை - மாஜி கணவர் குறித்து பொங்கிய சமந்தா!
நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் காதலிப்பது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என சமந்தா தெரிவித்துள்ளார்.
சமந்தா
நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா தன் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நாக சைதன்யாவும், பொன்னியின் செல்வன் படம் புகழ் சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாக சைதன்யா, சோபிதா பற்றி சமந்தா கூறியதாக ஒரு செய்தி வெளியானது. அதில், யார் யாருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு கவலை இல்லை. எத்தனை பேரை டேட் செய்தாலும் காதலின் மதிப்பை உணராதவர்கள் இறுதியில் கண்ணீர் தான் வடிப்பார்கள்.
வதந்திக்கு விளக்கம்
அந்த பெண்ணாவது சந்தோஷமாக இருக்க வேண்டும். அவர் தன் குணத்தை மாற்றிக் கொண்டு அந்த பெண்ணை காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால் அனைவருக்கும் நல்லது என குறிப்பிடப்பட்டிருந்தது.
I never said this!! https://t.co/z3k2sTDqu7
— Samantha (@Samanthaprabhu2) April 4, 2023
இதனை இணையத்தில் பார்த்த சமந்தா நான் இப்படி சொல்லவே இல்லை என தெரிவித்துள்ளார்.
தற்போது, ஏப்ரல் 14ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கும் தான் நடித்திருக்கும் சாகுந்தலம் படத்தை விளம்பரம் செய்து வருகிறார்.