என்னோட ‘அந்த’ பழக்கத்துக்கு காரணம் நாகசைதன்யா தான் - உண்மையை சொன்ன சமந்தா
முன்னாள் கணவர் நாகசைதன்யாவிடம் தான் கற்றுக் கொண்ட பழக்கம் குறித்து நடிகை சமந்தா வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவோடு சேர்ந்து நடித்துள்ளார்.
இவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது காதல் கணவரும், பிரபல நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருவரும் பிரிந்ததற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு சமந்தா நடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை தான் அனைத்திற்கும் காரணம் என கூறப்பட்ட நிலையில் அவர் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இதனிடையே சமூகத் வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதில் பிட்னெஸ் மீது உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் வர காரணம் என்ன என அவர் கேட்க அதற்கு சமந்தா, நான் உங்களுக்கு ஒரு பெரிய இரகசியத்தை சொல்கிறேன். அது என்னவென்றால் நான் நாக சைத்தன்யாவை பார்ப்பதற்காகத்தான் ஜிம்மிற்கு செல்ல ஆரம்பித்ததேன் . அவரால் தான் எனக்கு பிட்னெஸ் மீது ஆர்வம் வந்தது என்று கூறியுள்ளார். நாக சைதன்யா எப்போதும் ஜிம்மிற்கு செல்வதை வழக்கமாக கொண்டவர் என கூறியுள்ளார்.
இந்த பதிலைக் கேட்ட ரசிகர்கள் பலரும் அவரின் வெளிப்படையான கருத்தை பாராட்டியுள்ளனர்.