இது கண்ணா.. இல்ல கரண்ட்டா.. - தன் காந்த கண்ணழகு புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா - வைரலாகும் புகைப்படம்

Samantha
By Nandhini May 22, 2022 12:47 PM GMT
Report

தென்னிந்திய சினிமாத்துறையில் முன்னணி நட்சத்திரமாகவும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருடைய சிரிப்பிலும், அழகிலும் மயங்காதவர் யாருமில்லை. அந்த அளவிற்கு கொள்ளையழகில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடிக்கிறார் நடிகை சமந்தா.

கடந்த 28ம் தேதி நடிகை சமந்தா தன்னுடைய 35-வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளான அன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி அள்ளியுள்ளது.

இதனையடுத்து, சமந்தா தற்போது கிருஷ்ணா பிரசாத் தயாரித்துள்ளார் ‘யசோதா’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தெலுங்கு இந்தி தமிழ் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் படமாக வெளியிடப்படவுள்ள இப்படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரிஹரன் என இருவர் எழுதி இயக்கியுள்ளனர்.

தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் சமந்தா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சமந்தா தன்னுடைய காந்தக் கண்களை பார்க்கும் காட்சி ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது. 

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் -